Posts

Showing posts from August, 2022

இளையான்குடி மினி பாகிஸ்தானாக மாறி வருகிறதா?

Image
இளையான்குடி மினி பாகிஸ்தானாக மாறி வருகிறதா? இரண்டு நாட்களுக்கு முன்பு Vellore ibrahim BA,BL.   அவர்கள் மற்றும் வாகனங்களில் மீது தாக்குதல் நேற்றைய தினம் இளையான்குடியில் உள்ள ஜாகிர் உசேன் கல்லூரியில் #தேசிய_கல்விக்_கொள்கை குறித்து   கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விளக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி  புதுதில்லி லோக் அதாலத் நீதிபதி மாண்புமிகு திரு. #Dr_B_Ramaswamy அவர்கள் தலைமையில் நடைபெற இருந்தது இதில் கலந்து கொள்ள இளையான்குடி நோக்கி புறப்பட்டார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தும் நீதியரசர் அவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் இடைமறித்து கண்டன குரல்களை எழுப்பியது மட்டும் இல்லாமல் புத்தகங்களில் ஆயுதங்களை வைத்து தூக்கி எறிந்தும் இரும்பு கம்பியால் தாக்கவும் முயன்றார் மத்திய அரசின் அதிகாரியும் நீதியரசருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இளையான்குடி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்டது வன்மையாக கண்டிகத்தக்கது தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு #NEP2020  #தேசிய_கல்விக்_கொள்கை  #DMKFailsTN

சாட்டை சுழட்டும் மத்திய அரசு. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அடி வயிற்றில் புளியை கரைக்கிறது.

Image
   PMLA என்பதில் அப்படி என்ன விஷேசம்? உதாரணமாக, யரோ ஒருவர் தவறாக சம்பாதித்த ஒரு கோடியை என் வீட்டிற்கு முன்பு சாக்கு பையில் தவற விட்டு சென்று விடுகிறார். அதை நான் பார்த்ததும் எனக்கு இருந்த ஏகப்பட்ட கடன் சுமையால் கமுக்கமாக லபக்கி எடுத்துக் கொள்கிறேன். அதைக்கொண்டு கடன்களை கொஞ்சம் அடைத்துவிட்டு பல ஆடம்பர செலவுகளை செய்த பின்னரும் 60 லட்சம் பேங்கில் டெபாஸிட் செய்யனும், ஆனால் அந்த வருமானத்திற்கு கணக்கு கேட்கிறார்கள் என்பதால், வங்கியில் செலுத்த முடியாமல் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை பல நண்பர்கள் உறவுக்காரர்களிடம் கொடுத்து, அதை கட்டுமரம் போல ஒன்றன் பின் ஒன்றாக என் அக்கவுண்டில் கொண்டு வர திட்டமிடுகிறேன். அப்படி தப்பான வருமானத்தை நியாயமான வரவாக செய்வது தான் Money Laundry என்பதாகும். கருப்பு பணத்தை சலவை செய்து வெள்ளை ஆக்குவது. நேற்றுவரை பஞ்ச பாட்டு பாடிக்கிட்டு, பழைய கிழிந்த புடவை கட்டிக் கொண்டிருந்த மனைவி, கலர் கலராக பட்டு சேலை கட்ட, அதை பக்கத்து வீட்டுக்கார அம்மா போட்டு வாங்கி வேட்டு வெச்சிடாங்கள். ED வந்து மொத்த காசையும் அள்ளிக்கிட்டு போய்விட்டது. அப்படியெனில் பணம் மட்டுமல்ல, நானும...

திண்டுக்கல் பிஆர்ஓ கையாடல் *போட்டோகிராபர் போட்ட குண்டு

Image
 திண்டுக்கல் செய்தி:   திண்டுக்கல் பிஆர்ஓ கையாடல் *போட்டோகிராபர் போட்ட  குண்டு திண்டுக்கல்:  திண்டுக்கல் பிஆர்ஓ போலி பில் எழுதிய கையாடல் செய்ததாக போட்டோகிராபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார். இது பிஆர்ஓ அலுவலகத்தை கலங்கடிக்க செய்துள்ளது. திண்டுக்கல் பி ஆர் ஓ வாக இருப்பவர் வத்தலகுண்டை சேர்ந்த சீனிவாசன். இவரும் கணக்கர் செல்வநாயகியும் இணைந்து போட்டோகிராபருக்கு தெரியாமல் போலி பில் களை தயாரித்து பொருட்கள்,  போட்டோ எடுக்கும் கருவிக்கு உதிரிபாகங்கள் வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளனர். மேலும் பல விதமான ஊழல்கள் செய்து வருவதாக திண்டுக்கல் பிஆர் அலுவலகத்தில் போட்டோகிராபராக இருக்கும் ஈஸ்வரன் செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் முதலமைச்சர் தனி பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். கடந்த மூன்று மாதமாக எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் மதுரை ஹைகோர்ட்டில் போட்டோகிராபர் ஈஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் பொருட்கள் வாங்காமலே போலி பில் தயாரித்து அரசு பணத்தை கையாடல் செய்ததாக விளக்கியிருந்தார். இந்த மனுவை மதுரை ஹைகோர்ட் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. இதுக...

சமூக நீதிக்காக போராடும் பெரியாரிஸ்டுகள் தற்போது ஏன் இந்துக்களின் சமூக நீதிக்காக போராடுவதில்லை?

Image
 பெரியாரும் பெரியார் இயக்க தலைவர்களும், உறுப்பினர்களும் எப்போதுமே சமூக நீதி குறித்து பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர். பழங்காலத்தில் இருந்த தீண்டாமை ஜாதி பாகுபாடு போன்ற பல விஷயங்களை எதிர்த்து குரல் கொடுத்து சமூக நீதியை நிலைநாட்டியவர்கள் பெரியார் இயக்கவாதிகள் என்றால் அது மிகை இல்லை.  குறிப்பாக பிராமணர்கள் சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை கடைபிடித்த போது பிராமணர்களுக்கு எதிராக பொங்கி போராட்டம் நடத்தியவர்கள் பெரியார் இயக்கவாதிகள். ஆனால் தற்போது நமக்குத் தெரிந்தவரை எந்த பிராமணர்களும் சாதிய பாகுபாடு தீண்டாமை கடைபிடித்ததாக எங்கேயும் பிரச்சனைகளும் அல்லது வழக்குகளோ கேள்விப்பட்டதில்லை. இன்னும் சில இடங்களில் சாதி பாகுபாடு சில குறிப்பிட்ட ஜாதிகளில் பார்க்கப்பட்டு வந்தாலும் அதுபோன்ற மற்ற ஜாதிகள் பார்க்கும் சாதி பாகுபாடு பற்றி பெரியார் இயக்க வாதிகள் பேசுவதும் இல்லை பெரிய போராட்டங்கள் எதுவும் நடத்துவதுமில்லை ஏனெனில் அவர்கள் இவர்களை விட வலிமையானவர்களாகவும் வன்முறையை கையாளக் கூடியவர்களாகவும் பெரியார் இயக்கவாதிகள் பயந்து பம்மி விடுவர். தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில...

வேளாங்கண்ணி கோவில் திருவிழா

Image
   தமிழ்நாட்டில் வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவிற்கு நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

Image
 செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு *****************************             செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக    நகர் மன்ற துணைத் தலைவர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.              சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும்  அலுவலகம் என்ற முறையிலும் , வாசர்களுக்கு குப்பை  தரம் பிரிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வகையிலும், பரிசு வழங்கப்பட்டது          பரிசுகள் வழங்கிய நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களுக்கும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். #Pothigaitimes #Tenkasi #News #Today #Tamil #Senkottai 

இன்றைய 29/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  தமிழகத்தின் இன்றைய 29/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  திங்கட்கிழமை தங்கம் விலை ₹4790/கிராம் வெள்ளி விலை ₹60.00/கிராம்  #Pothigaitimes #News #Today #Tamil #Gold #Silver #Price 

திமுக மத்திய அரசுடன் சமரசத்திற்கு முயற்சி செய்கிறதா?

Image
 _*அடிக்கும் அடி இனி பலமாக இருக்கும் திருட்டு திமுக மட்டும் அல்ல.., இந்தியாவில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளுக்கும் ....*_ _பிரதமரை சந்திக்க மீண்டும் முதல்வர் டெல்லிக்கு காவடி தூக்கியது ஏன்?_ _நான் நிதியின் மகன், எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் என்று குருமாவிடம் துண்டை போட்டு சத்தியம் செய்தவர் மோடியை சந்தித்தார். எதற்கு? செஸ் போட்டியை வந்து துவங்கி வைத்ததற்கு. அதைத்தான் அப்போதே சொல்லிவிட்டாயே? அதுவும் முழு பக்க விளம்பரம் கொடுத்த பின்னர் எதற்கு? ரொம்ப தேங்ஸ்ங்க.._ _இப்படி யாராவது மீண்டும், மீண்டும் காரணமில்லாமல் தேங்க்ஸ் சொல்லிட்டு மண்டய சொறிஞ்சா, அவர் ஏதோ நம்மிடம்_ _எதிர்பார்க்கிறார் என்பதே அர்த்தம். அதாவது சில வாரங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு என்று வீரவதேசமாக முழங்கி,_ _மோடியை விரட்டிய முதல்வர், ஏன் இவ்வளவு குன்றிய முதல்வராக பம்ம வேண்டும்?_ _*எலி எட்டு முழ வேட்டி கட்டினா என்ன அர்த்தம்?*_ _ஆம், நம்மிடம் 39 MP க்கள் இருந்தும், அதை வைத்து எதுவும் பயன் இல்லை. பார்லிமெண்ட் கேண்டீனில் கொட்டி உடம்பை வளர்க்க மட்டும்தான் முடிகிறது. இன்றைய நிலையில்,மோடியே மீண்டும் பிரதமராக வர வாய்ப்புகள் பிரகாசம்...

கொங்கு மண்ணில் மண்ணைக் கவ்வுகிறதா? திமுக

Image
 சமீபத்தில் கொங்கு பகுதியில் விஜயம் செய்த ஸ்டாலினுக்கு கொங்கு பகுதி மக்கள் #Gobackstalin என்ற hastag உடன் தகுந்த பதிலடி கொடுத்தனர்.  பலமுறை மோடி தமிழகத்திற்கு வரும் பொழுது தன்னுடைய இணைய உப்பிக்களை வைத்து மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தியும் #GobackModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி மகிழ்ந்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதைப் போல தற்போது அவர்களுக்கே அது வினையாக இருக்கிறது. தமிழகத்திற்கு பெரும்பான்மை வருவாய் கொங்கு பகுதியில் இருந்தே வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு எப்போதுமே பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. மேலும் திமுக கடந்த தேர்தலிலும் கொங்கு பகுதியில் சொற்ப இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதிலும் சில கட்சி மாறி வந்த தனிப்பட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளர்களால் சில இடங்கள் கிடைத்தது.  தற்போது திமுக ஆட்சியில் கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஒரு முகத்தை திமுக பிரமுகர் எங்களுக்கு ஓட்டு போடாத கொங்கு பகுதி மக்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய ம...

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் 27)08/2022 அன்று நடைபெற்றது.

Image
 வணக்கம் 27.08.2022. நேற்று தேனி மாவட்டம் ஜுவன் அறக்கட்டளையோடு  மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு இணைந்து தேனி மாவட்டம், ஆண்டிபட்டி  துப்புரவு பணியாளர்களுக்கான  கூட்டம் ஆண்டிபட்டி சமுதாய கூட அரங்கில்  வைத்து நண்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது. 86 பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஜுவன் அறக்கட்டளை நிறுவனர் தோழர்.முருகேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் தோழர். சந்திரகலா  அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார்.  முன்னாள் சேர்மன் இராமசாமி  அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கவுன்சிலர் தோழர்.பராசக்தி பெருமாள் அவர்கள் முன்னிலை வகித்தார். துப்புரவு பணியாளர்களுக்கான சட்டமான   மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் பற்றிய விளக்கத்தை  நெறியாளர். வழக்கறிஞர். சகாய பிலோமின்ராஜ் அவர்கள் கருத்துரை வழங்கினார். மேலும் இச்சட்டத்தின் மறுவாழ்வு திட்டத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.   இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் தோழர். வ.முத்துக்குமார் தொகுத்து வழ...

பல்கீஸ் பானு பிரச்சனையை குற்றவாளிகளை விடுதலை செய்தது சரியா?

Image
 தமிழகத்தில் தற்போது பல ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டு வரும் பிரச்சினைகளில் ஒன்று பல்கீஸ் பானு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்துக்கள். பல ஊடகவியலாளர்களும் மற்றும் அரசியல் நோக்கர்களும் பல்கீஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது தவறு என்று பெரும்பான்மை கருத்துக்களை கூறி வருகின்றனர்  நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்த பின்னர் அதனை மேல்முறையீடு செய்து அரசியல் தலையீடுகளுடன் விடுதலைக்கு முயற்சி செய்வதென்பது நீதித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும். மேலும் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை தகர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப கருத்துக்களை மாற்றி மாற்றி கூறுவது நீதிமன்றத்தை பல்கீஸ் பானு பிரச்சனை கேள்விக்குள்ளாக்குவது சரி என்றால் ஏன் அவர்கள் யாரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் பிரச்சனை குறித்து அல்லது இது போன்று பல வழக்குகளில் தமிழகத்தில் பலரையும் விடுவிக்க வேண்டும் என்று இதே கருத்து கூறியவர்கள் கேட்பது சரியா? என்பது நமது கேள்வி. இங்குள்ள அரசி...

இன்றைய 27/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 #வணிகம்,#வர்த்தகம்,#விற்பனை தமிழகத்தில் இன்றைய 27/08/2022 , சனிக்கிழமை , தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  தங்கம் விலை ₹4840/கிராம் வெள்ளி விலை ₹61.30/கிராம்

தமிழக அரசு பேருந்து அவல நிலை

 தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அரசு பேருந்துகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பேருந்துகள் பராமரிப்பின்றியும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இல்லை. திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை அளித்ததனால் அவர் பதவியேற்றதும் உடனடியாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இது போன்ற இலவச அறிவிப்புகள் போக்குவரத்து கழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது இதனால் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் மக்களின் உயிருக்கே உத்திரவாதம் இல்லாததாக இருக்கிறது. பேருந்துகளை பராமரிக்கவும் புதிய பேருந்துகள் வாங்கவும் போக்குவரத்து கழகத்திற்கு நிதி இல்லாததால் காலாவதியான பேருந்துகளும் ஓட்டை உடைசல் ஆன கருத்துக்களுமே இயக்கப்பட்டு வருகின்றன. திரு ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் துணை முதலமைச்சராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு தமிழக அரசு நிதி நிலையில் போக்குவரத்து கழகங்களின் நிதி நிலையும் நன்றாக தெரியும். இருந்தும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேவையில...

இந்திய யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்.

Image
 இந்தியாவில் தற்போது பல போலிப் பல்கலைக்கழகங்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. இவை போலி டாக்டர் பட்டங்கள் வழங்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்புகளை நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது அவ்வாறு செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை இந்திய யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளவும். #Pothigaitimes #Fake #Universities #UGC #India

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி

Image
 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 *TNPSC Group-1(Preliminary) இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி* வணக்கம்.! *மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் *25.08.2022* முதல் அலுவலக வளாகத்திலேயே தொடங்கப்பட உள்ளது. *Date: 25.08.2022* *Time: 10.30 AM*  *பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரை:* திருமதி. ந.மகாலட்சுமி, மண்டல இணை இயக்குனர் (வே.நா),  திருநெல்வேலி.  *TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு உரை:* திருமதி S.R. ரம்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தென்காசி. *முதல்நாள் போட்டித் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு :*  தன்னார்வ பயலும் வட்டம், ஆசிரியர் குழு மூலம் வழங்கப்படும். *நன்றியுரை:* திரு. கா. தங்கவேல், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், தென்காசி. *குறிப்பு:* இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வாளர்கள் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், இந்த தகவலை உங்கள் தகுதியான  நண்பருக்கு பகிரலாம். *பதிவுகள்:* ...

இன்றைய 26/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 தமிழகத்தின் இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவர விபரம்  தேதி 26/08/2022 வெள்ளிக்கிழமை தங்கம் ₹4840/கிராம் வெள்ளி ₹61.30/கிராம்

தமிழகத்தில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயர்வு

Image
 தமிழக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் கார் ஜீப் போன்ற வாகனங்களுக்கு கட்டண உயர்வு சுமார் ஐந்து ரூபாய் மற்றும் கனரக வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய 25/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய 25/08/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  தங்கம் ₹4830/கிராம் வெள்ளி ₹61.10/கிராம்  #Pothigaitimes #Gold #Silver #Price #Today 

ஹிந்தி திரை உலகுக்கு பாடம் புகட்டிய கார்த்திகேயா-2

Image
 ஹிந்தி திரை உலகுக்கு பாடம் புகட்டிய கார் த்திகேயா-2 இந்து மத உணர்வுகளை கிண்டல் செய்தும் இந்தியாவுக்கு எதிராக குற்றம் கூறுவதையும் வாடிக்கையாக கொ ண் ட பா லிவுட் நடிகர் அமீர்கானுக்கு பாடம் புகட்ட விரும்பிய வலதுசாரிகள் சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தாவை புறக்கணிக்கும் படி #Boycott_Laal_Singh_Chaddha என்று சமூக வலை தளங்களில் கோரிக்கை வைத்தார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. லால்சிங் சத்தா படுதோல்வி அடைந்தது அமீர்கான் திரைப்பட வரலாற்றில் படுதோல்வி அடைந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் லால் சிங் சத்தாவையே கூற வேண்டும் என்கிற அளவிற்கு லால் சிங் சத்தா படுதோல்வி படமாகி விட்டது. பாலிவுட்டை தங்களின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இந்துக்களின் உணர்வுகளை கிண்டல் செய்து வந்த கான் நடிகர்களின் கரங்களில் .இருந்து பாலிவுட் விலகி இந்து மதம் மற்று ம் தேசியம் பேசும் வழிகளில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதற்கு ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற சினிமாக்களின் வெற்றியை உதாரணமாக கூறலாம். இதை விட முக்கியமானது என்னவென்றால் தெலுங்கில் இருந்து இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் 13ஆம் ...

திமுக அரசால் வீணடிக்கப்படும் மக்கள் பணம்

Image
 தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்காக வெள்ளலூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன இதில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகளுக்கு மேல் நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.   இந்த நிலையில் தற்போது திமுக அரசு அந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு மாற்றப் போவதாக அறிவித்து அதற்கான தேர்வு செய்யப்பட்ட பணிகள் தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் பயனில்லாமல் போவதால் அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதை விட்டுவிட்டு திமுக அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். #pothigaitimes #Coimbatore #Bussta...

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பானதா?

Image
 இந்தியாவில் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நினைவாக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதா? என்பதை நாம் ஆராய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். வளர்ந்த நாடுகளில் டேட்டா பாதுகாப்பு மற்றும் நமது தனிப்பட்ட டேட்டாக்களை நம் அனுமதி இன்றி மற்றவர்களுக்கு பகிர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த நாடுகளில் டேட்டா பாதுகாப்புக்கான முழுமையான சட்டங்கள் உள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை மிகுந்த மக்கள் தொகை கொண்ட நாடு தற்போது வேகமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வளர்ந்து கொண்டிருப்பதற்கு ஏற்ப நமது நாட்டில் டேட்டா பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாக்கவும் சரியான வழிமுறைகளும் சட்டங்களும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் நமது பணப்பரிவர்த்தனைகள் 100% பாதுகாப்பானது என்று சொல்ல இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்புடன் தங்கள் பண பிரச்சனைகளை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமை அற்ற அரசு என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரா கனிமொழி?

Image
 திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. ஸ்டாலின் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன் என்றும் ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்போதே அவர் இரண்டு லட்சம் இரண்டு கோடி என்று உளறி அந்த காணொளி மிகப் பிரபலமானது இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமதி கனிமொழி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் திமுக அரசால் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தவறிவிட்டது என்பதை நிரூபிக்க வகையில் வெளி மாநிலங்களில் வேலைக்குச் செல்ல இளைஞர்களை வலியுறுத்துவது போல ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஸ்டெர்லைட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்களைக் கண்டு பெரிய தொழிலதிபர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இவர்கள் ஆட்சியில் இவர்களே அனுமதி அளித்துவிட்டு ஆட்சி ...

பாவூர்சத்திரத்தில் பாலம் வேலை காரணமாக நெல்லை தென்காசி சாலையில் உள்ள ரயில்வே கேட் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும். பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Image
 தற்போது நெல்லையிலிருந்து தென்காசிக்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது இதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தச் சாலையில் உள்ள பாலங்கள் அகலப்படுத்தும் பணிகளும் ரயில்வே புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று 23 8 22 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாவூர்சத்திரத்தில் நெல்லை தென்காசி தேசிய நெடுஞ்சாலை உள்ள ரயில்வே கேட் பாலன் வேலை நடைபெறுவதின் காரணமாக அடைக்கப்பட்டிருக்கும். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடையம் சாலை வழியாக சென்று அத்தியூர் பகுதிக்கு சென்று சேரும் சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை முதல் வழக்கம்போல் சாலையை பயன்படுத்தலாம் என்று செய்தி குறிப்பிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tenkasi #Tirunelveli #Pavoorchathram #Pothigaitimes #Pothigai #today #trending

நெல்லை ராமையன்பட்டி பொதுப்பணித்துறை காவல்துறை வருவாய்த்துறை கூட்டு சேர்ந்து அகற்றிய விநாயகர் சிலை இந்துமுன்னணி போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை

Image
 வெற்றி வெற்றி வெற்றி *நெல்லை ராமையன்பட்டி பொதுப்பணித்துறை காவல்துறை வருவாய்த்துறை கூட்டு சேர்ந்து அகற்றிய விநாயகர் சிலை இந்துமுன்னணி போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை* நெல்லை மாநகரம் ராமையன்பட்டி இலந்தைகுளம் குளக்கரையில் இருந்த விநாயகர் கோவில் குளத்து ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பொதுப்பணித்துறை  உதவி செயற்பொறியாளர் புகாரில் வருவாய்த்துறை காவல்துறையோடு இணைந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை விநாயகர் கோவிலை இடிக்க  துவங்கினர்  தகவல் அறிந்து *இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில்*  மாவட்ட தலைவர் *சிவா* மாவட்ட பொதுச் செயலாளர் *பிரம்மநாயகம்* மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் *விமல் , சுரேஷ்*  ஆகியோர் உடனடியாக பிரச்சனைக்குரிய இடத்திற்கு வரைந்தனர்  கோவிலை  அகற்றியது இதே போல் கோவில் குளக்கரையில் உள்ள சர்ச் ஆக்கிரமிப்புகளையும் அளந்து அகற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என அதிகாரிகளிடம் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் குற்றாலநாதன் சவால் விடுத்து பேசினார் நாங்கள் நியாயமாக செயல்படுவோம் எந்த ஆக்கிரமிப்பு இருந்தாலும் அ...

உயர்கல்வித்துறையில் மணிகண்டன் நியமனம் - ஏன் கொதிக்கிறார் சவுக்கு சங்கர்?

Image
சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உயர்கல்வித்துறைக்கு திரு மணிகண்டன் அவர்கள் நியமிக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியானது. இதனை அடுத்து பலரும் அவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மற்றும் சனாதனத்துக்கு துணை போகக் கூடியவர் அதனால் அவரை எப்படி உயர்கல்வித்துறைக்கு நியமனம் செய்யலாம்? அவர் கல்வித் துறையில் சனாதன சக்திகளின் கருத்துக்களை நுழைப்பார் என்று பலரும் பல விதமாக பேசத் தொடங்கினர். இதில் சவுக்கு சங்கர் பல youtube சேனல்களிலும் இது குறித்து பயங்கரமாக பேசி கொதித்துப் போனார். இந்த கருத்துக்கள் அனைத்தும் அப்படியே ஏற்றுக் கொண்டாலும் கூட இதே பள்ளி கல்வித்துறையால் திரு லியோனி அவர்கள் பாடநூல் கழகத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரும் திராவிட பின்பலம் கொண்டவர் தானே திராவிடக் கொள்கைகளை புகுத்த நினைப்பார்கள் அப்போது ஆர் எஸ் எஸ் சனாதன தர்மம் என்று இன்று பேசுபவர்கள் அன்று ஏன் வாய் திறக்கவில்லை  அவர்கள் வாயில் என்ன இருந்தது?  சவுக்கு சங்கர் போன்றவர்கள் தீவிர திராவிட ஆதரவாளர்கள் என்பது அனைவருக்கும் அறிந்த விஷயம். அதனால்தான் திராவிட சித்தாந்தம் உள்ளவர்கள் புகுத்தப்படும் போது பேசாமல் இருந்...

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம் ஏன்?

Image
 குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சாலையில் சமீபத்தில் ஒரு மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்து விட்டார் இந்த விபத்து காரணத்திற்காக ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த சர்ச் சுவர் மட்டும் ஏன் விடுபட்டது என்பதை இந்த தொகுதியின் எம்எல்ஏ மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட கலெக்டர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் fire சதீஷ்குமார் மாவட்ட தலைவர் நெசவாளர் பிரிவு செங்கல்பட்டு #CMOTamilNadu #MKStalin #tambaramcorparation #districtcalectarchengalpattu #annamalaikuppusamy #VinojSelvam #Blsanthosh #kesavavinayam #meenakshinithayasundar தயவுசெய்து இதை அனைவரும் ஷேர் செய்யவும் அலட்சியமாக விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் கிரிப்டோ கிறிஸ்தவரின் அட்டகாசம்

Image
 இது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி போஸ்ட் ஊர்மேனியழகியான் பஞ்சாயத்திலுள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நடக்கும் கிறிப்டோ கிறிச்சவனின் அடாவடித்தனம்... 😡😡😡 இதுபோன்று திருக்கோயிலில் உள்ளே சென்று கலவரம் செய்து மதக் கலவரத்திற்கு வித்திடும் கலவரக்காரர்களை ஒடுக்க இந்த அரசும் அறநிலையத்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்குமா? இந்துக்களின் மத உணர்வு காக்கப்படுமா? #Pothigaitimes #Tamilnadu #trending #Today #இந்துசமயஅறநிலையத்துறை #Tenkasi 

லஞ்சம் வாங்குபவர்கள் மீது அரசு உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Image
  வேலூர் மாவட்டம், அணைகட்டு வட்டம் & தாலுகா, பள்ளிகொண்டா மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ராஜா என்பவரை புரோக்கராக வைத்துக்கொண்டு ஒவ்வொரு மின் இணைப்பிற்கும் லஞ்சம் வாங்கும் வீடியோ.. லஞ்ச ஒழிப்புத் துறை  லஞ்சம் வாங்குபவர்கள் மீது அரசு உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

உள்ளாட்சிகளில் கவுன்சிலர்களின் அட்டகாசம்

Image
 உள்ளாட்சித் தேர்தல் நடந்த முடிந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளாட்சி பொறுப்புகள் அனைத்தும் பஞ்சாயத்து தலைவர்கள் பொறுப்புக்கு சென்றவுடன் பல மக்கள் நலத்திட்டங்களும் சலுகைகளும் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த அந்த நிலையில் அத்தனையும் பகல் கனவாகவே சென்று விட்டது. தற்போது உள்ளாட்சியில் சென்ற ஆட்சியில் அழைத்துக் கொண்டிருந்த ஸ்கூட்டி மானியம், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகம் போன்ற பல மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு சில திட்டங்களுக்கு வேறு வடிவங்களும் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக அம்மா மினி கிளினிக்கு பதிலாக இல்லம் தேடி மருத்துவம் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் மக்களிடம் பெரிதாக பயன் எதுவும் அளிக்கப்படவில்லை என்று பரவலான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் அராஜகங்களும் வசூல் வேட்டைகளும் அதிகரித்துள்ளதோடு மக்களை சரியாக மரியாதையோடும் அவர்கள் நடத்துவதில்லை என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தற்போது வலைத்தளங்களில் வைரலான பல கவுன்சிலர் ...

திமுகவின் இந்தி எதிர்ப்பு பித்தலாட்ட அரசியல்

Image
 திமுகவின் இந்தி எதிர்ப்பு பித்தலாட்ட அரசியல் [5:34 pm, 20/08/2022] Saffron Group: தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் எப்போதுமே தங்களுக்கு சிக்கலான நேரங்கள் வரும்பொழுது எடுக்கும் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று இந்தி எதிர்ப்பு. ஆனால் திராவிட கட்சியுடைய முக்கிய தலைவர்கள் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது. மேலும் தீவிர ஹிந்தி எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொண்ட கருணாநிதி முரசொலி மாறன் போன்றவர்களின் வாரிசுகள் ஹிந்தி கற்று வட மாநிலங்களில் தங்கள் வியாபாரத்தையும் அரசியலையும் முன்னிலைப்படுத்தி உள்ளனர். மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட பொழுது ஹிந்தி எதிர்ப்பு என்பது கட்டாய திணிப்புக்கு மட்டுமே. தாங்களாக விருப்பப்பட்டு படித்தால் அது தினிப்பு இல்லை என்று கூறியுள்ளார். நம்மை எவ்வாறு முட்டாளாக்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும். திமுகவின் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் பணம் கட்டி ஹிந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடிமகனின் கு...

போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

Image
 போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனியார் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்ந்து பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அறிந்தோ, அறியாமலோ அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கலவரம் நடக்கும் சமயத்தில் அங்கு இருந்ததாலும் அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து கலவரங்களில் ஈடுபட்டதாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் தன் எழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் தொடர்ந்து வந்த நிலையில் சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து இறுதியில் அதை கலவரமாக மாற்றினர். அதேபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்திலும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராடிய போது சில சமூக விரோத கும்பல்களின் அராஜகத்தால் பெரும் கலவரமாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. தற்போது கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிரான போராட்டமும் நீதிமன்றம் கூறியபடி திட்டமிட்டு கலவரமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் சாமானிய பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றா...

தலைவர்களை நினைவாக நினைவுச் சின்னங்கள், சிலைகள் அமைப்பது தேவையா?

Image
 தலைவர்களை நினைவாக நினைவுச் சின்னங்கள், சிலைகள் அமைப்பது தேவையா? நமது நாட்டில் எப்போதும் அரசியல் தலைவர்கள் மகான்கள் சித்தாந்தவாதிகள் ஆகியோருக்கு சிலை மற்றும் நினைவு சின்னங்கள் எழுப்பி அவர்கள் நினைவாக அவை பராமரிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சிலைகள் மற்றும் நினைவகங்கள் அமைக்கப்பட அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரி வருவாய் செலவு செய்து அமைத்து வருகிறது. இவ்வாறு சிலைகள் மற்றும் நினைவகங்கள் அமைப்பது அத்தலைவரின் போற்றுவதாகவும் அவர்கள் சாதனைகளை எடுத்துரைப்பதாகவும் இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு செலவு செய்யாமல் இது போன்ற நிலங்களில் செலவு செய்யும் போது அரசின் உதவி எதிர்பார்த்து காத்திருக்கும் அடித்தட்டு மக்களும் மற்றும் அரசு மேம்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இது போன்ற செலவினங்கள் தேவையா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. தற்போது பல தலைவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவே இருக்கிறார். இதனால் மக்கள் தலைவரின் சிலை அல்லது நினைவிடத்தை பார்க்கும் போது அது கட்சிக்கான விளம்பரம் ஆகவே பார்க்கப்படுகிறது. எனவே இது போன்...

வாகனங்கள் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஏன்?

Image
  வாகனங்கள் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஏன்? தற்போது வாகன உற்பத்தி துறையில் அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் தொழில் போட்டியுடன் புதிய புதிய வாகனங்களை அதிகபட்ச சிறப்பம்சங்களுடன் சந்தையில் களம் இறக்கி வருகின்றன.  இவ்வாறு சந்தையில் கனம் எடுக்கப்பட்டு வரும் வாகனங்கள் பலவித புதிய சிறப்பு தொழில்நுட்பங்கள் சிறப்பம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. மேலும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் கூடுதலாக இருக்கும்போது அவற்றை சரியாக பராமரிக்க வேண்டிய பராமரிப்புச் செலவுகளும் கூடுகின்றது. அது மட்டுமல்லாது தற்போது வரும் புதிய வாகனங்களில் சிறிய சிறிய உதிரிபாகங்கள் கூட ஒரு செட்டாகவே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 1980 களில் தயாரிக்கப்பட்ட டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனங்களில் பிரேக் கேபிள்கள் உள்ளே வரும் பிரேக் கேபிள் கம்பி மட்டுமே தனியாக உதிரிபாகமாக கிடைக்கும் அதன் விலை அதிகபட்சம் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய்க்குள் இருக்கும். ஆனால் தற்போது வரும் எக்ஸெல் வாகனங்களுக்கு பிரேக் கேபிள் கிட்டுகள் செட் ஆகவே வாங்க வேண்டிய...

ஸ்டாலினின் சந்தர்ப்பவாத அரசியல்

Image
  ஸ்டாலினின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி சந்தேகம் மரணம். பொதுவாக திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அனிதா தற்கொலை, சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பொழுது எங்கே பிணம் விழும் என்று காத்திருந்த ஸ்டாலின் அவர்கள் அங்கெல்லாம் ஓடி சென்று மலிவான அரசியல் செய்து அவர்களுக்கு பணத்தை கொடுத்து அரசையும் எதிர்க்கட்சிகளையும் பணத்தை கொடுக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்து கேவலமான அரசியல் செய்து வந்தார். ஆனால் தற்போது அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது கள்ளக்குறிச்சியில் இருந்த மாணவிக்கு எந்த ஒரு நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. அவர் ஆட்சியில் இருக்கும் போது இறந்தவருக்கு அத்தனை லட்சம் கொடுங்கள் இத்தனை லட்சம் கொடுங்கள் என்ற அரசை வலியுறுத்தியவர் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தன்னுடைய அஜாக்கிரதையால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தின் தந்தைக்கு அரசு வேலை கொடுக்கவெல்லாம் வலியுறுத்திய ஸ்டாலின் இப்போது ஏன் அதை செய்வதில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சியாக...

பெரியாரிஸ்டுகளின் சோத்தில் உப்பு இருக்கா?

Image
 பெரியாரிஸ்டுகளின் சோத்தில் உப்பு இருக்கா? தமிழகத்தில் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் பெரியாரிஸ்ட்டுகள். இவர்களுக்கு அரசியல் ரீதியாக பெரிதும் துணை நிற்பது திமுக. திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடவுள் மறுப்பு கொள்கை பற்றியும் பெரியார் சித்தாந்தங்கள் பற்றியும் அரசியல் மேடைகளில் பலமுறை பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பெரியார் இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். அதேபோல் பெரியார் இயக்கங்களும் திமுக உடன் மிகவும் நெருக்கமாகவும் அரசியல் ரீதியான ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. பெரியார் இயக்கங்கள் தமிழகத்தில் கடவுள் பக்தி பற்றி பேசுபவர்களை ஏளனம் செய்வதும் கேலி கிண்டல்கள் செய்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். தீவிர பக்தி மார்க்க இயக்கங்களையே அவர்கள் விமர்சிப்பதும் கேவலமாக பேசுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் திமுக தலைவரின் மருமகனும் தமிழகத்தின் முடிசூடாய் இளவரசன் என்று வர்ணிக்கப்படும் திரு சபரீசன் அவர்கள் திருச்செந்தூரில் பக்தர்களை எல்லாம் காக்க வைத்துவிட்டு தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்தி சர்வநாச யாகம் என்ற ஒரு யாகத்தை நடத்தி சாமி கும்பிட்டதாக தகவல்கள் வ...